தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ரூ.7.30 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசியபோது,
“தர்மபுரியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகளில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பில், சிப்காட் நுழைவாயில் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் இங்கு அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் 2 முதல் 3 ஆண்டுகளில் இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் தர்மபுரி மாவட்டம், ஓசூர் கண்டுள்ள தொழில் வளர்ச்சியை அடையும்” என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ராஜ்
மதுரை மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!