ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க இன்றே கடைசித் தேதி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அறிவித்தது. வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, விவசாயம் என தமிழ்நாட்டில் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளன.
இவற்றை ஆதாருடன் இணைக்க ஜனவரி 31, பிப்ரவரி 15, பிப்ரவரி 28 என மூன்று முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் அவகாசம் முடிவடையும் நிலையில் காலை 11 மணி வரை 2.66 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது 99.57% ஆகும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீதம் 1.50 லட்சம் இணைப்புகள் இணைக்க வேண்டி உள்ளது . அவர்கள் இன்று மாலைக்குள் இணைக்க வேண்டும். இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறினார்.
ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: https://adhar.tnebltd.org/Aadhaar/
பிரியா
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
“க்ளைமாக்ஸை இப்போதே கேட்டால் எப்படி”?: திமுக கூட்டணி குறித்து கமல்
வான்கடே ஸ்டேடியத்தில் சச்சினுக்கு காத்திருக்கும் பர்த்டே கிப்ட்!