வரும் அக்டோபர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 20) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “2023-2024ஆம் ஆண்டுகளுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையினை நிதியமைச்சர் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்வார். எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர். “33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்படும். ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் அவ்வளவு தான். நடைமுறைக்கு வருமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமானோரை சந்தோஷப்படுத்திவிட்டார்கள் என்பதால் மகளிருக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கலாம் என்று என்னிடம் சொல்கிறார்கள்” என்றார்.
பிரியா