அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தின் தொடக்கத்தில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அந்த வகையில், தங்கம் விலை இன்று (அக்டோபர் 7) சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.5 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.40 குறைந்துள்ளது.
இன்று 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.5,280-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 5 குறைந்துள்ளது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.40 குறைந்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், நேற்றைய விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் ரூ.66.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.66,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
திமுக தலைவர் பதவி: 12 மணிக்கு வேட்பு மனு செய்கிறார் ஸ்டாலின்
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்!