உடல் எடையைக் குறைக்க விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு, காலையில் சிறந்த உணவுத் தேர்வாக ஓட்ஸ் இருக்கிறது. எனினும், ஓட்ஸ் உணவு அனைவருக்கும் ஏற்றதா என்ற கருத்தும் நிலவுகிறது.
பொதுவாக ஓட்ஸ் உணவில் கரையத்தக்க நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்தை எளிமையாக்கும். அது மட்டுமல்லாமல் ஓட்ஸ் உணவில் புரதம், வைட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து நிரம்பியுள்ளதால் இந்த ஓட்ஸ் – மாதுளம்பழ ஸ்மூதி செய்து அருந்தலாம்.
என்ன தேவை?
ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
மாதுளம்பழம் – ஒன்று
பால் – அரை கப்
நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மாதுளம்பழத்தை நறுக்கி முத்துகளை உதிர்க்கவும். முத்துகளை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். ஓட்ஸுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஒரு ஃப்ளண்டரில் வேகவைத்த ஓட்ஸ், மாதுளம்பழ ஜூஸ், காய்ச்சி ஆறிய பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து சில்லென்று பரிமாறவும்.
குறிப்பு: மாதுளம்பழத்துக்குப் பதில் ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா போன்ற பழங்கள் சேர்த்தும் ஸ்மூதி செய்யலாம்.