இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விசேஷ நாட்களில் லட்டு வகைகள் செய்யப்படுகின்றன. விசேஷத்துக்கு மட்டும்தானா… இந்த வீக் எண்டில் சத்தான இந்த ஓட்ஸ் லட்டு செய்து கொடுத்தால் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உங்களைக் கொண்டாடுவார்கள்.
என்ன தேவை?
ஓட்ஸ் – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
நெய் – கால் கப்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
முந்திரி – 10
எப்படிச் செய்வது?
முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும்.தேங்காய்த்துருவல், ஓட்ஸை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். ஓட்ஸ் ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை உருக்கி, முந்திரி சேர்த்து வறுக்கவும்.
பிறகு, அதே நெய்யில் ஓட்ஸ் பவுடர், தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குறிப்பு: உலர் பழங்கள், பருப்புகளை நெய்யில் வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.