கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – கேரட் ரொட்டி!

தமிழகம்

சர்வதேச அளவில் பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது ஓட்ஸ். காலை வேளையில் சாப்பிட நினைப்பவர்கள் இதை கஞ்சியாகவே செய்து சாப்பிடுகிறார்கள். இந்த ஓட்ஸில் ஹெல்த்தியான ரொட்டியும் செய்து சுவைக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

என்ன தேவை?

ஓட்ஸ்  – அரை கப்
கோதுமை மாவு – ஒரு கப்
கேரட் துருவல் – கால் கப்
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு, மல்லித்தழை, நெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஓட்ஸை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கோதுமை மாவு, கேரட் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்து கையால் நன்கு கலக்கவும். தன்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு நெய் விட்டு, இரு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். சூடாக தயிர்ப் பச்சடி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

சளி பிடித்திருக்கும்போது லெமன் ஜூஸ் குடிக்கலாமா?

காளான் ஸ்டஃப் பார்பிக்யு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *