சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் வருகை நேரத்தை ஆப்பிள் கைப்பேசி பயன்படுத்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக ’Chennai Bus’ செயலியின் புதிய பதிப்பை அமைச்சர் இன்று (பிப்ரவரி 22) தொடங்கி வைத்தார்.
அனைத்து சென்னை மாநகர பேருந்துகளின் தானியங்கி வாகனம் இருப்பிடம், பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவை பொதுமக்களின் கைப்பேசியில் தெரியும் வண்ணம் சென்னை பஸ் செயலி கடந்த 2022 ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆண்ட்ராய்டு கைப்பேசியில் மட்டுமே இது செயல்பட்டு வந்த நிலையில், ஐபோனிலும் பயன்படுத்தும் வகையில் ஐ.ஓ.எஸ் வெர்சனையும் வெளியிடும்படி அரசுக்கு நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னை பஸ் செயலியின் புதிய பதிப்பை (ஐ.ஓ.எஸ் வெர்சன்) போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.
பொதுமக்கள் ’சென்னை பஸ்’ செயலி வாயிலாக நகரத்திற்கு புதிதாக வரும் மக்கள் தங்கள் இருப்பிடம் (Location), அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் (Bus Stop), அந்த நிறுத்ததிற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்தின் விவரம், பேருந்தின் வருகை நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே தெரிவிக்கும் வகையியில் SOS பொத்தானும் இச்செயலியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் தங்களது பயண திட்டத்தை பொதுமக்கள் முன்கூட்டியே வகுத்துக்கொள்ள முடியும்.
இந்த செயலி அறிமுக நிகழ்வில், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திரரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் திரு.க.குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
துப்பாக்கிச்சூட்டில் விவசாயி உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சர்ச்சைப் பேச்சு : அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்!
”மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்”: எடப்பாடி காட்டம்!