செர்னோபில், புகுஷிமா மாதிரியான விபத்துகள் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் நடக்க வாய்ப்பில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கூடங்குளம் அணு உலை கழிவுகளை பாதுகாப்பாக வைக்க கட்டமைப்பை ஏற்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், மத்திய அரசு இன்று(நவம்பர் 28) எழுத்துப்பூர்வமான அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக, பத்திரமாக கையாள பூமிக்குள் ஆழத்தில் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்கும் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செர்னோபில், புகுஷிமா அணு உலைகளில் இல்லாத அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கூடங்குளம் அணு மின்நிலையம் செயல்படுவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது.
கொரோனா காலத்திலும் கூடங்குளம் அணு உலை மிகச் சிறப்பாக செயல்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா