தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதற்கிடையே வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது
அதன்படி தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை நீடித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
திகட்ட திகட்ட பாடலில் நா.முத்துக்குமாரின் திகட்டாத வரிகள்!