வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.
தமிழ்நாட்டிற்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில்தான் அதிகமான மழை பெய்யும்.
அந்த வகையில், அக்டோபர் மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், நேற்று(செப்டம்பர் 29) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
காயல்பட்டினம், குன்னூரில் 9 செ.மீ, பாளையம்கோட்டையில் 8 செ.மீ. செங்கோட்டையில் 5 செ.மீ., புத்தன் அணையில் 1 செ.மீ. என பல்வேறு மாவட்டங்களில் மழைப் பதிவானது.
மேலும் அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 38.5° செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 20.2° செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(செப்டம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் “ குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று மற்றும் நாளை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
அக்டோபர் 3ஆம் தேதி, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருப்பதி லட்டுவில் கலப்படம் – ஆதாரம் இருக்கிறதா?: சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்… பாமக கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!
200 பில்லியன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஸக்கர்பர்க்… எல்லாம் உங்க புண்ணியம்தான்!