சென்னையில் குல்லா அணிந்து சென்ற இஸ்லாமிய சிறுவனை தாக்கிய வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் நேற்று (செப்டம்பர் 18) கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முகமது இக்லாஸ் (12). எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 16ம் தேதி மாலை அங்குள்ள மசூதியில் தொழுகைக்கு சென்று இருக்கிறார்.
பின்னர் அரபி வகுப்பிற்கு சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் சிறுவன் தனியாக சைக்கிளில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
வழக்கமாக தான் செல்லும் கண்ணதாசன் தெரு வழியாக சென்ற சிறுவனை எதிரே வந்த 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் திடீரென்று வழி மறித்துள்ளார்.
சிறுவனை நகரவிடாமல் பிடித்துக்கொண்ட அவர், ”ஏய் உனக்கு குல்லா ஒரு கேடா?” என்று தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் ஒருவழியாக அங்கிருந்து சைக்கிளில் வேகமாக தப்பினார்.
இதுகுறித்து சிறுவன் இக்லாஸ் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனை தாக்கிய நபர் கண்டறியப்பட்டுள்ளார். அவரது பெயர் ஹரிலால் என்பதும், வட இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நேற்று அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்ட ஹரிலால் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வேட்டியை மடித்து கட்டி களத்தில் குதித்த ஹெச்.ராஜா
”திமுக மாதிரி பன்னீரும் எதிரிதான்…” நடிகை விந்தியா