சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அக்டோபர் 16 அன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், எதிர்பார்த்ததைப்போல் இன்று கனமழை பெய்யவில்லை. இதற்கு மாறாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிவாக்கில், ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் பகுதிகளில் மிதமான மழை தொடரும் மற்றும் இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் அக்டோபர் 18 வரை தொடரும். இயல்பான வடகிழக்கு பருவமழை தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கடைசி வரை நடிகர் திலகம் பாட்டு… அமைதியாக அடக்கம் செய்யப்பட்ட சிங்கப்பூர் சிவாஜி
சென்னையில் இந்த ரூட்ல போக வேண்டாம்… போலீஸ் எச்சரிக்கை!
அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு உணவு இலவசம் : ஸ்டாலின் உத்தரவு!