தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணி பாதிப்பு!

தமிழகம்

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் ஆண்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அய்யா வைய்யனாற்றில் இருந்து பிரிந்து கீழையூர், செண்பதன் இருப்பு, குச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக திருவெண்காடுக்கு வருகிறது. இந்த வாய்க்கால் மூலம் 3,000க்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகியும் ஆண்டி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீ்ர் வரவில்லை.
வாய்க்காலில் தண்ணீ்ர் வராததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் குறுவை சாகுபடி பணி பாதிக்கப்படும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மூன்று குளங்களில், ஆண்டி வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் வராததால், கோயில் குளங்களில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டி வாய்க்காலுக்குத் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *