ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழு மாநில கல்விக் கொள்கை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று (ஜூலை 1) சமர்ப்பித்தது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தமிழில் 800 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் அறிக்கை ஒன்றை தயாரித்து இன்று (ஜூலை 1) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், “தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே பள்ளிகளில் தொடர வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு தமிழக பள்ளிகளில் தொடர வேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும்.
5 வயது பூர்த்தியானவர்கள் தான் 1ஆம் வகுப்பில் சேரமுடியும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் 1ஆம் வகுப்பில் சேர முடியும்.
3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தக்கூடாது. நீட் தேர்வு முறை இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.
கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்” என மாநில கல்விக் கொள்கை அறிக்கையில், தமிழக அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துரை வைகோவின் புதிய பாணி, ‘குடும்ப அரசியல்’!
”சிருங்கேரி மட ரகசியங்களை வெளியிடுவோம்” : அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை பதிலடி!