”இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது”: பயணிகள் அதிர்ச்சி!

Published On:

| By christopher

no omni bus service from oct 24th 6oclk

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 24) மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்ற அறிவிப்பு சென்னை திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்‌ மாநில ஆம்னி பேருந்துகளின்‌ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம்‌ நிர்ணயம்‌ இல்லாத போதிலும்‌ அரசுக்கும்‌ பயணிகளுக்கும்‌ பாதிக்காத வண்ணம்‌ சங்கங்களே கட்டணம்‌ நிர்ணயம்‌ செய்து கடந்த 2022 செப்டம்பர்‌ மாதம்‌ போக்குவரத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ ஆணையர்‌ தலைமையில்‌ நடந்த கூட்டத்தில்‌ கட்டணம்‌ ஒப்புதல்‌ பெற்று அதே கட்டணத்தில்‌ இன்றுவரை இயக்கிக்கொண்டுள்ளோம்‌.

கடந்த 10 நாட்களாக அண்ணாநகர்‌ சரக இணை ஆணையர்‌ மற்றும்‌ வட்டார போக்குவரத்து அலுவலரும்‌ சங்கங்களுடன்‌ இணைந்து சங்கங்கள்‌ நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல்‌ கண்காணித்து இன்றுவரை அதிக கட்டணம்‌ புகார்‌ இல்லாமல்‌ இயக்கிவந்தோம்.

எனினும் ஆயுதபூஜை மற்றும்‌ விஜயதசமி மற்றும்‌ 4 நாட்கள்‌ தொடர்‌ விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல்‌ இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம்‌ என்ற பெயரில்‌ ஆணையரின்‌ தவறான வழிகாட்டுதலின்‌ படி சிறைபிடித்தும்‌, மீண்டும்‌ சிறைபிடிப்பதை நிறுத்த கோரியும்‌ 24.10.2023 மாலை 6 மணிமுதல்‌ ஆம்னி பேருந்துகள்‌ இயங்காது.

24.10.2023 ஆம்னி பேருந்துகளில்‌ 1 லட்சத்திற்கு மேலாக பயணிகள்‌ முன்பதிவு செய்துதுள்ளார்கள்‌.

அவர்களை போக்குவரத்துதுறை சார்பாக வழியில்‌ இறக்கிவிடுவதை தவிர்க்கும்‌ பொருட்டு அனைத்து சங்கங்களும்‌ இணைந்து வேறு வழியில்லாமல்‌ கனத்த இதயத்துடன்‌ இதனை அறிவிக்கிறோம்‌” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் இன்று முதல் சென்னைக்கு திரும்புவார்கள் என்ற நிலையில், ஆம்னி பேருந்து சங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில்!

அக்.25 வரை சிறப்புப் பேருந்துகள் இயங்கும்!

பி.எம்.டபிள்யூ கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை: வைரல் வீடியோ!

டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel