முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை. பழைய அணையை முறையாக பராமரித்தால் அடுத்த 50 ஆண்டுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்’ என மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் பேசியுள்ளார்.
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தேனி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களின் விசாயத்துக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தமிழகம் அதை மறுத்து அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறுகிறது. நிபுணர்களின் ஆய்விலும் அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், அதை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு, புதிய அணை கட்டுவதே தீர்வு என பிடிவாதம் பிடித்து வருகிறது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேரளத்தில் பல விவாதங்கள் நடந்து வருகிறது. தற்போது, முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் , கோழிக்கோடு நகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மெட்ரேமேன் ஸ்ரீதரன் பேசுகையில், முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைத்தால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கிட விட முடியும். புதிய அணை அவசியமில்லை. நான்கு அல்லது 5 சிறு தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் நீரோட்டத்தை திசை மாற்றி விட்டு விட வாய்ப்புள்ளது.
அதன் மூலம் அணை நீர் மட்டத்தை பாதுகாப்பான அளவில் பராமரிக்கவும் முடியும்.பழைய அணையை முறையாக பராமரித்தால் 50 ஆண்டுகள் நன்றாகவே இருக்கும். புதிய அணையை கட்டுவதற்கு அதிக செலவு ஆவதோடு, குறைந்தபட்சம் 12 முதல் 15 ஆண்டு அணையை கட்டி முடிக்க தேவைப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
SHARE MARKET : சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை… லாபம் ஈட்டும் என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ்!