தக்காளி சந்தையில் பதுக்கல் இல்லை என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், Coop Bazaar கூட்டுறவு சந்தை செயலியை இயக்கி வைத்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் இன்று (ஜூலை 6) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் வங்கி சேவை மற்றும் விவசாயத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் எளிதாக இல்லங்களில் இருந்தவாரே செயலி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் குறைவான சேவைக் கட்டணத்துடன் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக 8 கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையிலான பொருட்கள் இந்த செயலி மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஒப்புதலோடு அறிவித்தோம். இன்று செயல்படுத்தி உள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நியாயவிலைக்கடைகளில் தேவையான அளவிற்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. 111 மையங்களில் விற்கப்படுகிறது. சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சிகளில் முதற்கட்டமாக விற்பனை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் விலையேற்றம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த அரசு எடுத்த நடவடிக்கையில் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருப்பவர்கள் பாராட்டுகிறார்கள். பிற மாநில நகரங்களில் தட்டுப்பாடுகளுக்கு மாநில அரசுகள் நடவடிக்கைக்கள எடுக்கவில்லை.
மயிலாப்பூர் உள்ளிட்ட கடைகளுக்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. 82 நியாயவிலைக்கடைகளில் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது தக்காளி விலை குறைந்திருக்கிறது. நியாயவிலைக்கடைகளில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பரபரப்புக்காக விலை அதிகமாக கூறக்கூடாது. தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படியாக விரிவு படுத்தப்பட உள்ளது” என்றார்.
மேலும், மளிகைப்பொருட்கள் தேசிய அளவில் விலை உயர்ந்திருக்கிறது. விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும் . தக்காளியை வியாபாரிகள் யாரும் பதுக்கவில்லை என்று கூறினார்.
நில அபகரிப்பு வழக்கு: பொன்முடி விடுதலை!
எலான் மஸ்க்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய மார்க்
”சிறுநீர்” குற்றவாளி வீடு இடிப்பு: தொழிலாளியின் கால்களை கழுவிய முதல்வர்!