பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒன்றாம் எண் கேட் முன்பு நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார்.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் ஆளுநர் மாளிகை புகார் அளித்தது.
இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 26) ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாகப் பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலைச் சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.
அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பிக் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திராவிட மாடலுக்குள் திருவண்ணாமலை மாடல்? என்ன செய்தார் எ.வ.வேலு?
பிறந்தநாளில் புரொபோசல்… அமலாபால் ரியாக்சன்: க்யூட் வீடியோ!
மகளிர் உரிமைத் தொகை… 11 லட்சம் பேர் மேல்முறையீடு: அமைச்சர் உதயநிதி