சாதிய பாகுபாடு இல்லை : பள்ளியில் ஆய்வு செய்த அதிகாரி தகவல்!

தமிழகம்

பாஞ்சாங்குளம் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று அப்பள்ளியில் ஆய்வு செய்த பின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் ஊராட்சியில், மிட்டாய் வாங்க சென்ற குழந்தைகளை சாதியை காரணம் காட்டி கடைக்காரர் திருப்பி அனுப்பிய நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இனிமேல் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வராதீங்க. ஊர் கட்டுப்பாடு போட்டிருக்குன்னு கடைக்காரர் சொல்வதும், கட்டுப்பாடா… என்ன கட்டுப்பாடுன்னு தீண்டாமை குறித்து அறியாமலேயே அந்தக் குழந்தைகள் கேட்டு நிற்பதும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்த தான் செய்தது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை உரிமையாளரான மகேஸ்வரனையும், அவரது உறவினரான ராமச்சந்திர மூர்த்தியையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் ஊருக்கு வரவும் போலீஸ் தடை விதித்து இருக்கிறது. இந்நிலையில் கடையில் மட்டுமல்ல பாஞ்சாங்குளம் பள்ளியிலும் சாதியப் பாகுபாடு இருப்பதாக புகார் எழுந்தது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தரையில் உட்கார வைக்கப்படுவதாகவும், மேல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதேபோன்று மதிய உணவுக்கு தட்டு வழங்குவதில் கூட தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக குழந்தைகள் கூறினர். இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து,  மாவட்ட வருவாய் நல அலுவலர் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று(செப்டம்பர் 19) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்குள்ள ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தினார். ஆய்வின்போது புகார் கூறிய மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.

அதன்பிறகு பேசிய கல்வி அலுவலர் கபீர், பாஞ்சாங்குளம் பள்ளியில் மாணவர்கள் புகார் கூறியது போன்று சேரோ, பெஞ்சோ எதுவுமில்லை. அனைத்து குழந்தைகளும் தரையில் தான் உட்கார வைக்கப்படுகின்றனர். இங்கு சாதிய பாகுபாடும் காட்டப்படுவதில்லை  என்று தெரிவித்தார்.

கலை.ரா

சவத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு: இன்னும் தொடரும் தீண்டாமை!

சவுக்கு சங்கர் கைது – “இயற்கை நீதிக்கு முரணானது” : திருமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *