NLC started its land grabbing in chidambaram

கால்வாய்க்காக அழிக்கப்படும் நெற்பயிர்கள்: என்.எல்.சி விளக்கம்!

தமிழகம்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை இன்று (ஜூலை 26) என்.எல்.சி தொடங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவியில் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் இன்று காலை தொடங்கியுள்ளது.

விளைந்து நிற்கும் பயிர்கள் அழிக்கப்படும் காட்சிகள் செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது என்.எல்.சி நிர்வாகம் விளக்க அறிக்கை கொடுத்துள்ளது.

அதில், “இங்கு நிலங்களை 2006ஆம் ஆண்டே கையகப்படுத்தி விட்டோம். எனினும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நிலங்களில் இருந்து நாங்கள் யாரையும் வெளியேறுமாறு கூறவில்லை. மேலும் அவர்களை தற்காலிகமாக பயிர் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தோம். பின்னர் தயாராக இருந்த நெற்பயிர்களை அறுவடை செய்யவும் அனுமதி வழங்கி இருந்தோம்.

இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்ட பின்பே தற்போது கால்வாய் வெட்டும் பணிகள் சுமூகமாக நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

எனினும் என்.எல்.சி கூறியுள்ள முழுமையான இழப்பீட்டை தாங்கள் பெறவில்லை என்றும், இன்னும் 30 நாட்கள் காத்திருந்தால் அறுவடை முழுவதுமாக முடிந்திருக்கும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்திய அணி கேப்டனுக்கு தண்டனை : வரவேற்ற பாகிஸ்தான் ஜாம்பவான்!

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை!

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *