என்.எல்.சி. சுரங்கமா? குத்தாட்ட அரங்கமா? வடநாட்டு அதிகாரிகளின் அடாவடி!

தமிழகம்

என்எல்சி தலைவரின் பிரிவு உபச்சார விழா ஆடல் பாடல் மற்றும் மது விருந்துகளுடன் நடத்தி இருப்பது மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுரங்கம் ஒன்று, சுரங்கம் ஒன்றின் விரிவாக்கம், சுரங்கம் இரண்டு என மூன்று சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் டன் வரையில் பழுப்பு நிலக்கரி எடுக்கப்பட்டது . இதனால் மின் உற்பத்தியும் அதிகமாக இருந்தது.

தற்போது பழுப்பு நிலக்கரி எடுக்க விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் டன் முதல் 20 ஆயிரம் டன் வரை மட்டுமே நிலக்கரி எடுக்கப்படுகிறது.

தெர்மல் 1 விரிவாக்கத்தில் 420 மெகாவாட் மற்றும் என்எல்சி நியூ தெர்மல் பவர் பிளான்ட்டில் ஆயிரம் மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற பவர் பிளான்டுகள் நிலக்கரி இல்லாமல் இருந்து வருவதாக அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இப்படி ஒரு கவலைக்குரிய நேரத்தில் தான் என்எல்சி சேர்மேனாக இருந்து வந்த ராகேஷ் குமார் ஓய்வு பெறும் நாளில், ஆட்டம், பாட்டம் மது விருந்துடன் பிரிவு உபசரிப்பு விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பர் 30ம் தேதி நடந்த இந்த விழாவில், என்எல்சி நிறுவனமே அதிரும் வகையில் குத்தாட்டம் நிகழ்ச்சியை வடநாட்டு அதிகாரிகள் நடத்தி இருப்பதாக தமிழக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரண்டாவது சுரங்கத்தின் மெயின் கேட்டில் இருந்து சுமார் 750 மீட்டர் தூரத்தில் உள்ள மண் மேட்டில், தற்காலிக ரிசார்ட், ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அளவுக்கு இருக்கைகள், மேடை அமைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த குத்தாட்டத்தை ரசித்து பார்க்க அதிகாரிகளுக்கு உயர்தர மது வகைகள், ஒயின், விஸ்கி, பிராந்தி, சிக்கன் மட்டன் மற்றும் வெஜிடேரியன் வகைகள் என அசத்தியுள்ளனர்.

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்த வேலை சோற்றுக்கு பிழைப்பு இல்லாமல் போராடி வரும் நிலையில் பல லட்ச ரூபாய் செலவில் பிரிவு உபச்சார விழா நடத்தி இருப்பது தொழிலாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு அபாயகரமான உயர் பாதுகாப்பு இடத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையினர் இருந்தபோது அவர்களும் ரசிக்கும் அளவில் நிகழ்ச்சி நடத்தி இருப்பது அநாகரிகமானது என்று கூறும் தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, இதுவரையில் இப்படி ஒரு காரியத்தை வேறு எந்த சேர்மனும் நடத்தியது இல்லை என்கிறார்.

வணங்காமுடி

பாலா படத்திலிருந்து விலகிய சூர்யா: ஏன்?

இரட்டை சகோதரிகளுடன் திருமணம்: மாப்பிள்ளை மீது பாய்ந்த வழக்கு!

+1
1
+1
4
+1
7
+1
2
+1
3
+1
4
+1
1

Comments are closed.