என்எல்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய சேர்மனாக வந்துள்ளவர் பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு பெரிய அளவில் யாகம் செய்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கேட்டும், புதியதாக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் நிலம் கொடுக்க மறுத்தும் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் செய்து வருகின்றனர்.
நிலம் இழந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். மக்கள் போராட்டம் பிரேக்கிங்காக மாறும் போது போலீசார் குவிக்கப்பட்டு லத்தியாலும் துப்பாக்கி முனையாலும் மக்கள் மிரட்டப்பட்டு போராட்டம் நீர்த்துபோக செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் என்எல்சி நிறுவனத்தின் புதிய சேர்மனாக பொறுப்பேற்றுள்ளார் பிரசன்னக்குமார் மோட்டுப்பள்ளி.
நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கும் வழிகளை ஆராயாமல், நிலம் இழந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராடுபவர்கள் அழியவும், எதிர்ப்புகள் குறையவும், மேலும் நிறுவனம் சுபிக்ஷமாக வளரவும் சேர்மன் பதவிக்கு எந்தவிதமான குந்தகம் வராமல் தடுக்கவும் அவர் பெரிய அளவில் யாகம் நடத்தி வருகிறார்.
கோடிக்கணக்கில் செலவு செய்து பஞ்ச பூதம் ஸ்தலங்களான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சிபுரம் சிவன் கோயில், திருவானைக்காவல் சிவன் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், காளகஸ்தி சிவன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களில் ஏகதசா அதிருத்ரா மஹா அபிஷேகம் மற்றும் யாகம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் நவம்பர் 19 ஆம் தேதி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையில் ஏகாதச அதிருத்ரா மஹா யாகம் நடத்தியுள்ளனர். வி. நடராஜன் ரத்னா தீட்சிதர் தலைமையில் 121 தீட்சிதர்கள் இந்த யாகத்தில் பங்கேற்றனர்.
யாகத்தின் முடிவில் ஒவ்வொரு தீட்சிதர்களுக்கும் ஐந்தாயிரம் மதிப்புள்ள பட்டுவேட்டி பட்டுத் துண்டு செலவு 6 லட்சத்து 5 ஆயிரம், தலா ஒருவருக்கு15 ஆயிரம் சம்பளம் என 18 லட்சத்து 15 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் யாகம் மற்றும் அபிஷேகம் செய்வதற்காக நெய், பழங்கள் போன்ற பொருட்கள் வாங்கியது உட்பட சுமார் 50 லட்சம் செலவு செய்துள்ளதாக சொல்கிறார்கள் என்எல்சி அதிகாரிகள்.
ஒரு கோயிலுக்கு 50 லட்சம் என்றால் ஐந்து கோயிலுக்கு 2.50 கோடி ரூபாய் செலவு செய்வதற்கு சேர்மன் பிரசன்னக்குமார் பட்ஜெட் போட்டுள்ளார் என்கிறார்கள் என்எல்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் துரைமுருகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… மொத்தமும் கொட்டிய முத்தையா?
’ஆடு மேய்ச்சா நீ ஆண்டவரா?: குய்கோ டிரெய்லர் வெளியானது!
பஞ்ச பூத தளங்களில் பெரியார் சிலையை வச்சுடவமா! பேனா அமைதி ஆய்டும்..