தமிழில் மருத்துவ படிப்பு: நிர்மலா சீதாராமன்

தமிழகம்

மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 24) 35வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, “இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. மருத்துவத் துறையில் ஆயிரக்கணக்கான பட்டங்கள் இன்று வழங்கப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மருத்துவத் துறையின் பணி மிகவும் சிறப்பானது. பிரதமரின் முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. மருத்துவ கல்வியும், மருத்துவத் துறையும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை விட கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

சித்தா, ஆயுர்வேதா, அலோபதி என மருத்துவத்தில் எந்த துறை வேண்டுமானாலும் பயின்று மக்களுக்குச் சேவை செய்யலாம். கொரோனா காலத்தில் சித்த மருத்துவம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. கபசுர குடிநீர் கொரோனாவிற்கு எதிராக நன்றாக செயல்பட்டது.

nirmala sitharanam says medical studies should be in mother tunk

சர்வதேச அளவில் 24.6 பில்லியன் அமெரிக்க டாலர் மருந்துப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 60 சதவீத தடுப்பூசி உலக அளவில் இந்தியாவில் கிடைக்கிறது. மேலும் உலக அளவில் மருந்துப் பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா திகழ்கிறது.

மருத்துவத் துறையில் தமிழில் கல்வி வழங்க வேண்டும். தமிழை நேசிக்கும் தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியைத் தமிழில் வழங்க வேண்டும். தமிழக மருத்துவ துறை அமைச்சர் முன் நின்று கூறுகிறேன். தாய்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும்.

ஆராய்ச்சிக்கும், உயர்கல்விக்கும் தாய் மொழியில் கல்வி கற்பதுதான் சிறந்த வழி. மருத்துவத் துறையில் இருக்கும் ஒவ்வொரு கல்வியும் தமிழை ஆதாரமாக வைத்துக் கற்பிக்க வேண்டும். மருத்துவக் கல்வி மட்டுமல்லாது மருத்துவக் கல்வியுடன் தொடர்புடைய அனைத்து கல்வியும் தமிழில் இருந்தால் நல்லது.

தாய் மொழியில் பலம் இருந்தால் மற்ற மொழிகளைச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவிட்டுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் உள்ள சில மருத்துவமனைகள் அதிக பணம் வசூல் செய்தது வருத்தமளிக்கிறது.

எனவே மருத்துவத் துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவமனைகள் கட்டி மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்” என்று பேசினார்.

மோனிஷா

திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான்: முதல்வர் ஸ்டாலின்

அரங்கில் நுழைந்ததும் விஜய் செய்த சம்பவம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *