NIRF Ranking 2024 : Nationally IIT Madras, Anna University are top : Here's the full list!
|

NIRF தரவரிசை : தேசிய அளவில் IIT மெட்ராஸ், அண்ணா பல்கலை. முதலிடம் : முழு பட்டியல் இதோ!

NIRF Rankings 2024 : தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன.

தேசிய அளவில்  நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF ) ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த தரவரிசை பட்டியல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தரவரிசையில் பங்கேற்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2021ஆண்டு 6,272 ஆகவும், 2022ஆம் ஆண்டு 8686 ஆகவும் 7254 ஆகவும்,  இருந்த நிலையில், இந்த ஆண்டு 10000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தரவரிசையில் பங்கேற்றன.

சிறந்த பல்கலைக்கழகங்கள், சிறந்த கல்லூரிகள், சிறந்த பொறியியல், மருத்துவம், சட்டம், மேலாண்மைக் கல்லூரிகள், பார்மா கல்லூரிகள், கட்டிடக்கலை மற்றும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் உள்ளிட்ட 13 பிரிவுகளைத் தவிர, திறந்த பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள், மாநில நிதியுதவி பெறும் அரசுப் பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்று புதிய பிரிவுகள் இந்த ஆண்டுக்கான தரவரிசையில் சேர்க்கப்பட்டன.

Image

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

அதன்படி ஒட்டுமொத்த மற்றும் பொறியியல் கல்வி நிறுவன பிரிவுகளில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக IIT மெட்ராஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட முழு NIRF  தரவரிசைப் பட்டியல் இதோ!

Image

‘ஒட்டுமொத்த’ பிரிவில் டாப் 10  கல்வி நிறுவனங்கள்!

1: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ், தமிழ்நாடு

2: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) பெங்களூரு, கர்நாடகா

3: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய், மஹாராஷ்டிரா

4: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) டெல்லி, டெல்லி

5: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கான்பூர், உத்தரபிரதேசம்

6: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) காரக்பூர், மேற்கு வங்கம்

7: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), டெல்லி

8: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ரூர்க்கி, உத்தரகண்ட்

9: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கவுகாத்தி, அசாம்

10: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி

டாப் 10 பொறியியல் நிறுவனங்கள்!

NIRF தரவரிசை 2024 இல், நாடு முழுவதும் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் IIT மெட்ராஸ் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அத்துடன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி) திருச்சிராப்பள்ளி நிறுவனமும் டாப் 10 பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில் பொறியியல் நிறுவனங்களின் தரவரிசையில் ஐஐடிகள் முதல் 8 இடங்களைப் பெற்றுள்ளன.

வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) இந்தியாவின் டாப் 10 பொறியியல் நிறுவனங்களில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.

1: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ், தமிழ்நாடு

2: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) டெல்லி, டெல்லி

3: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய், மகாராஷ்டிரா

4: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கான்பூர், உத்தரபிரதேசம்

5: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) காரக்பூர், மேற்கு வங்கம்

6: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ரூர்க்கி, உத்தரகண்ட்

7: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கவுகாத்தி, அசாம்

8: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஹைதராபாத், தெலுங்கானா

9: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (என்ஐடி) திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

10: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) வாரணாசி, உத்தரபிரதேசம்

டாப் 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்!

நாட்டின் சிறந்த மேலாண்மை நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு நிறுவனம் கூட டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை.

1: இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) அகமதாபாத், குஜராத்

2: இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) பெங்களூர், கர்நாடகா

3: இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) கோழிக்கோடு, கேரளா

4: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லி, டெல்லி

5: இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) கல்கத்தா, மேற்கு வங்கம்

6: இந்திய மேலாண்மை நிறுவனம்(IIM) மும்பை, மஹாராஷ்டிரா

7: இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) லக்னோ, உத்தரபிரதேசம்

8: இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) இந்தூர், மத்தியபிரதேசம்

9: XLRI – சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், ஜாம்ஷெட்பூர், ஜார்க்கண்ட்

10: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய், மஹாராஷ்டிரா

டாப் 10 கல்லூரிகள்!

நாட்டின் சிறந்த கல்லூரி கல்வி நிறுவனங்களில் பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 7வது இடமும், சென்னை லெயோலா கல்லூரி 8வது இடமும் பிடித்துள்ளன.

1: இந்து கல்லூரி, டெல்லி

2: மிராண்டா ஹவுஸ், டெல்லி

3: செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, டெல்லி

4: ராம கிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கொல்கத்தா

5: ஆத்மா ராம் சனாதன் தர்மம் கல்லூரி, டெல்லி

6: செயின்ட் சேவியர் கல்லூரி, கொல்கத்தா

7: பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி – கோவை, தமிழ்நாடு

8: லயோலா கல்லூரி – சென்னை, தமிழ்நாடு

9: கிரோரி மால் கல்லூரி, டெல்லி

10: பெண்களுக்கான லேடி ஸ்ரீ ராம் கல்லூரி, டெல்லி

டாப் 5 ‘மருத்துவ’ கல்லூரிகள்!

1: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), டெல்லி

2: முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), சண்டிகர்

3: கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) – வேலூர், தமிழ்நாடு

4: தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்) – பெங்களூரு, கர்நாடகா

5: பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) – வாரணாசி, உத்தரபிரதேசம்

டாப் 5 பல் மருத்துவக் கல்லூரிகள்!

1: சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் – சென்னை, தமிழ்நாடு

2: மணிப்பால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, கர்நாடகா

3: மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி

4: கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் – லக்னோ, உத்தரப் பிரதேசம்

5: டாக்டர் டி.ஒய்.பாட்டீல் பல் மருத்துவக் கல்லூரி – புனே, மஹாராஷ்டிரா

டாப் 10 ‘பார்மஸி’  கல்வி நிறுவனங்கள்!

1: ஜாமியா ஹம்தார்ட், டெல்லி

2: தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) ஹைதராபாத், தெலுங்கானா

3: பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) பிலானி, ராஜஸ்தான்

4: JSS மருந்தியல் கல்லூரி – ஊட்டி, தமிழ்நாடு

5: இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி மும்பை, மகாராஷ்டிரா

6: JSS மருந்தியல் கல்லூரி – மைசூரு, கர்நாடகா

7: தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) மொஹாலி, பஞ்சாப்

8: பஞ்சாப் பல்கலைக்கழகம்

9: மணிப்பால் மருந்தியல் அறிவியல் கல்லூரி, கர்நாடகா

10: SVKM இன் நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (NMIMS) மும்பை, மகாராஷ்டிரா

டாப் 5 ‘சட்ட’ கல்லூரிகள்!

1: நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி – பெங்களூரு, கர்நாடகா

2: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU), டெல்லி

3: நல்சார் சட்டப் பல்கலைக்கழகம் – ஹைதராபாத், தெலுங்கானா

4: மேற்கு வங்க தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகம் -கொல்கத்தா, மேற்கு வங்காளம்

5: சிம்பியோசிஸ் சட்டப் பள்ளி – புனே, மகாராஷ்டிரா

சிறந்த டாப் 10 மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள்!

1: அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை, தமிழ்நாடு

2: ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் – கொல்கத்தா, மேற்கு வங்கம்

3: சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் – புனே, மகாராஷ்டிரா

4: கல்கத்தா பல்கலைக்கழகம், மேற்கு வங்கம்

5: பஞ்சாப் பல்கலைக்கழகம், பஞ்சாப்

6: உஸ்மானியா பல்கலைக்கழகம் – ஹைதராபாத், தெலுங்கானா

7: ஆந்திரா பல்கலைக்கழகம், ஆந்திரா

8:  பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர், தமிழ்நாடு

9: கேரளா பல்கலைக்கழகம், கேரளா

10: கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கேரளா

சிறந்த திறன் பல்கலைக்கழகங்கள்!

1: கூட்டுவாழ்வு திறன் மற்றும் தொழில்முறை பல்கலைக்கழகம், புனே

2: ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம், பல்வால்

3: பாரதிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர்

சிறந்த திறந்த பல்கலைக்கழகங்கள்!

1 – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU), டெல்லி

2 – நேதாஜி சுபாஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம், மேற்கு வங்கம்

3 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம், குஜராத்

சிறந்த கல்வி நிறுவனங்கள் (புதுமை கண்டுபிடிப்புகள்)!

இந்த தரவரிசையில் கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்த ஐஐடி கான்பூர் இந்த ஆண்டு 5வது இடத்திற்குச் சென்றுள்ளது.

1: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய், மஹாராஷ்டிரா

2: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ், தமிழ்நாடு

3: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT)  ஹைதராபாத், ஆந்திரா

4: இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு, கர்நாடகா

5: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT), கான்பூர், உத்தரபிரதேசம்

6: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) ரூர்க்கி, உத்தரகண்ட்

7: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லி, டெல்லி

8: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மண்டி, இமாச்சல பிரதேசம்

9: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) காரக்பூர், மேற்கு வங்கம்

10: அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை, தமிழ்நாடு

சிறந்த கல்வி நிறுவனங்கள் (விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை)!

1 – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் – புசா, பீகார்

2 – தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் – கர்னால், ஹரியானா

3 – பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் – லூதியானா, பஞ்சாப்

4 – பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் – வாரணாசி, உத்தரபிரதேசம்

5 – இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் – இட்டாநகர், உத்தரப் பிரதேசம்

டாப் 10 கல்வி நிறுவனங்கள் (ஆராய்ச்சி)

1 – இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு, கர்நாடகா

2 – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மெட்ராஸ், தமிழ்நாடு

3 – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லி, டெல்லி

4 – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாய், மஹாராஷ்டிரா

5 – இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) காரக்பூர், மேற்கு வங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வயநாடு நிலச்சரிவு: லோன் வாங்கியவர்கள் தவிப்பு… வங்கி செய்த அற்புத காரியம்!

பிரசாந்த்தின் அந்தகன் : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts