வெளிமாநில உருளைக்கிழங்கு: நீலகிரி விவசாயிகள் கவலை!

தமிழகம்

வெளிமாநிலங்களில் இருந்து தற்போது உருளைக்கிழங்கு அதிக அளவு வரத் தொடங்கியுள்ளதால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிந்துள்ளது. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உட்பட பல்வேறு வகையான மலை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.

பொதுவாகவே நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு விலை கூடுதலாகக் கிடைக்கும். அதுவும் உருளைக்கிழங்குக்கு எப்போதுமே விலை அதிகமாக கிடைக்கும்.

சாதாரணமாக கடைகளில் கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.50 வரை கிடைத்து வந்தது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களான கோலார் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது உருளைக்கிழங்கு அதிக அளவு வரத் தொடங்கியுள்ளன. இந்த கிழங்கு ரூ.15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இவை தற்போது நீலகிரி மாவட்டத்துக்கும் அதிக அளவு வரத் தொடங்கியுள்ளதால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.20 முதல் 25 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதே நேரம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜ்

பட்ஜெட்: அதிருப்தியில் தலைமை செயலக சங்கம்!

சொற்ப ரன்களில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ் !

கிச்சன் கீர்த்தனா: சீஸ் பால்ஸ்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *