தொடர் மழை: தேயிலைக்கு உரமிடும் பணிகளில் நீலகிரி விவசாயிகள் தீவிரம்!

தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தற்போது பசுந்தேயிலைக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தோட்டத் தொழிலாக தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. சுமார் 55,000 ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.

தேயிலை தொழிலில் மாவட்டம் முழுவதும் சுமார் 60,000 சிறு குறு விவசாயிகள் உள்ளனர்.ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளின்போது தேயிலை மகசூல் அதிகரிக்கும். இந்த நேரத்தில் விவசாயிகள் வருவாய் ஈட்டும் பொருட்டு தங்கள் தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரிப்பது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் உரமிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. மகசூல் அதிகரிப்பு காரணமாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம்  தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பனிவரகு கஞ்சி வித் பப்பட்

ED வீசிய சம்மன் அஸ்திரம்… தடுத்து நிறுத்திய அரசு வாதம்! நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

”உத்தரகாண்ட் மீட்பு பணி உத்வேகம் அளிக்கிறது!”: பிரதமர் மோடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *