தீ விபத்து: குன்னூரில் தொடரும் சோகம்!

தமிழகம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் இன்று (நவம்பர் 24) மீண்டும் தீ விபத்து நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலையில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான வெடிமருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த நவம்பர் 19ஆம் தேதி, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 8 ஊழியர்களும் வேகமாக ஓடியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 24) குன்னூர் அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்டிங் பணியின்போது தீப்பொறி தெறித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது‌. பணியில் ஈடுபட்டு வந்த மனோஜ், இமாம் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெ.பிரகாஷ்

சீதை போல தீக்குளிக்கத் தயார்: காயத்ரி ரகுராம்  

உதயநிதி வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.