நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் தமிழகத்தின் நீலகிரியை அடுத்துள்ள கூடலூர் முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் திடீரென 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தது. அடுத்தடுத்து பன்றிகள் இறந்ததால் வனத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதனால் இறந்த பன்றிகளின் மாதிரிகளை புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த ஆய்வின் முடிகள் நேற்று வந்தது. அதில் இறந்த 20 பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் முதுமலை வனத்துறையினர் குழுக்களாகப் பிரிந்து அந்த பகுதியில் உள்ள பன்றிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
வார் ரூம்: அண்ணாமலையை கிழித்து தொங்க விட்ட மாரிதாஸ்
சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்: விண்ணை முட்டிய சிவ சிவ கோஷம்!