தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையானது திருநெல்வேலி, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக், தஞ்சை நடராஜபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பக்ருதீன், திருச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த அப்சல்கான், கோவையில் பிஎப்ஐ முன்னாள் நிர்வாகி அப்பாஸ் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கண்டித்த பாமக நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
அரசாணை ஊதியம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட தூய்மைப்பணியாளர்கள் முடிவு!
டன்னுக்கு ரூ.95 உயர்வு: கலங்கி நிற்கும் கரும்பு விவசாயிகள்!