கோவை, சென்னை, தென்காசி ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் உடல் கருகி உயிரிழந்தார். குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி 82 ஆவது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெண் கவுன்சிலரான முபசீரா கோவை மாநகராட்சி வரி விதிப்பு குழுவின் சேர்மனாக உள்ளார். பெரிய கடை வீதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் அக்கல்லூரியில் படித்தவர்கள் மட்டும் தொடர்புடையவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகரில் 21 இடங்களிலும் புறநகரில் கிணத்துக்கடவு என்ற இடத்திலும் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில், திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டிலும், நீலாங்கரையில் பிஸ்மில்லா தெருவில் உள்ள புகாரி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் சோதனை நடைபெற்று வருகிறது.
மோனிஷா
வேலைவாய்ப்பு : தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!
இரவோடு இரவாக சீமான் மீதான புகார் வாபஸ்: விஜயலட்சுமி விளக்கம்!