கோவை சம்பவம் : காலையிலேயே களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!

Published On:

| By Selvam

தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 45 இடங்களில் இன்று (நவம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே மாருதி காரில் பயணித்த போது கார் வெடித்து ஜமேஷா முபின் என்ற நபர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த தமிழக காவல்துறை, என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது.

என்.ஐ.ஏ அதிகாரிகள், தமிழகம் முழுவதும் இன்று காலையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, ஜமாலியா, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உக்கடம், கோட்டை மேடு, பொன் விழா நகர் ரத்தினபுரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கிடைத்ததா என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

சென்னையில் மழை: அலுவலகம், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரின் கவனத்திற்கு!

தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு: கட்காரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share