காலையிலேயே களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ: கோவை சென்னையில் சோதனை!

தமிழகம்

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் 60 இடங்களில் இன்று (பிப்ரவரி 15) காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் சோதனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் நெல்லை சென்னை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையில்  டவுன் கரிக்காதோப்பு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளிலும், தென்காசி அருகே அச்சன்புதூர் பகுதியிலும், சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி  என 5 இடங்களிலும்,  கோவையில் 16 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது.

அதுபோன்று கேரளாவில் ஐந்து இடங்களிலும், கர்நாடகாவில் சில பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

தங்கம் கடத்தல்: 2022-ல் 3,500 கிலோ பறிமுதல் – காரணம் என்ன?

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *