தஞ்சாவூரில் இன்று (ஜூன் 30) தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இரண்டு நபர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுதொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று விரிவான சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற சர்வதேச அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்காக தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் அல்தம் சாஹிப் ஆகிய இருவரும் பணியாற்றியது தெரியவந்தது.
இவர்கள் இஸ்லாமிய இளைஞர்களிடம் தீவிரவாத சிந்தனைகளை ஊக்குவிப்பது மற்றும் ஜனநாயகம், அரசியலமைப்பு, நீதித்துறை போன்றவை இஸ்லாத்திற்கு எதிரானது என இளைஞர்களுக்கு ரகசியமாக வகுப்புகள் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இந்தியா தற்போது நாத்திகர்களின் நாடு என்றும் வன்முறை ஜிகாத் மூலமாக இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டியது நமது கடமை என்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது மொபைல் ஃபோன்கள், லேப்டாப், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் மற்றும் ஹிஸ்புத் தஹ்ரீர் சித்தாந்தம் அடங்கிய பல்வேறு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் களைகட்டிய வானவில் சுயமரியாதை பேரணி!
ரோஹித், கோலியை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு…. ரசிகர்கள் ஷாக்!