தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் இன்று (மே 9) கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிவில் முன்னாள் பி.எஃப்.ஐ நிர்வாகிகளான சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கல்லை சேர்ந்த முகமது கைசர் மற்றும் தேனியை சேர்ந்த சாதிக் அலி ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் (PFI) தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில் கூர் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், சட்டவிரோத ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ரிலீஸ் எப்போது?
உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி கைது!