நீலகிரியில் உறைபனி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published On:

| By Selvam

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை, நேற்றுடன் (ஜனவரி 14) ஓய்ந்ததது. இந்தநிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 15) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு இரவுகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அயலான் Vs கேப்டன் மில்லர்: பாக்ஸ் ஆபிஸில் யார் முன்னிலை?

ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்: எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share