அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார்? ஆறு பேர் பட்டியல்!

தமிழகம்

தமிழக காவல் துறையின் கூடுதல் டிஜிபியாக இருக்கக்கூடிய தாமரைகண்ணன் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் முடிவடைவதால், அந்த இடத்தைப் பிடிக்க ஐபிஎஸ் வட்டாரத்தில் ரேஸ் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது.

தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பதவியில் இருந்துவரும் தாமரைகண்ணனின் ஐபிஎஸ் பதவிக் காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை நிரப்பப் போகும் ஐபிஎஸ் யார்? என அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

next additional dgp tamilnadu police decided

“காலியாகப் போகும் கூடுதல் டிஜிபி பதவி இடத்தில் தற்போது உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமிக்க அவரது விருப்பத்தைக் கேட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

ஆனால் முதல்வர் அலுவலகம், ’டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத் துறையில் கூடுதல் டிஜிபியாக நீடிக்க வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்துள்ளது. அதனால் அவர் உளவுப் பணியில் தீவிரத்தைக் காட்டி வருகிறார்.

சந்திப் ராய் ரத்தோர்

தற்போது ஆவடி கமிஷனராக பணியாற்றி வரும் சந்திப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் இந்த பட்டியலில் உள்ளார். இவர், டெல்லியைச் சேர்ந்தவர். டெல்லி பட்டாலியன், சிஆர்பி மற்றும் சென்னை இணை கமிஷனர் போன்ற பதவிகளில் பணியாற்றியவர்.

காவல் ஆணையர் அமல்ராஜ்

அடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ். 1996 பேட்ஜை சேர்ந்த இவர், மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். திருச்சி, கோவை மண்டல ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார், தாம்பரம் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக இருந்தவர். இவரிடம் டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி பதவி தொடர்பாக தொடர்பு கொண்டு விருப்பத்தை கேட்டிருக்கிறார்.

ரயில்வே ஏடிஜிபி வனிதா

அடுத்து ரயில்வே ஏடிஜிபியாக உள்ள வனிதா. திருப்பூரின் முதல் பெண் காவல் ஆணையராக பணியாற்றியவர். வேலூர் சரக டிஐஜி, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் தற்போது ரயில்வே ஏடிஜிபியாக உள்ளார். பரங்கிமலை மாணவி சத்யா கொலை வழக்கை விசாரித்தவர்.

ஷங்கர் ஐபிஎஸ்

அடுத்ததாக ஏடிஜிபி அட்மின் பொறுப்பை கவனித்து வரும் ஷங்கர் ஐபிஎஸ். இவர், கேரளாவில் பிறந்தவர். புதுக்கோட்டை எஸ்பி, சென்னை சிட்டியில் சட்டம் ஒழுங்கு பிரிவு, வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்

ஏடிஜிபியாக இருக்கும் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ். பஞ்சாப்பைச் சேர்ந்த இவர், வடஇந்தியாவில் மத்திய உளவுப் பிரிவான ஐபியில் இருந்தவர். பிறகு சிபிசிஐடி ஐஜி மற்றும் சென்னை சிட்டி கமிஷனராக பணியாற்றியவர்.

அபின் தினேஷ் மோடாக் ஐபிஎஸ்

அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஐபிஎஸ். டெல்லியில் இருக்கக் கூடிய ஐபிஎஸ் அதிகாரிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு சர்வீஸுக்கு வந்தவர். சிபிஐ மற்றும் என்ஐபி ஆகிய பிரிவிலும் பணியாற்றியவர்” என்றனர்.

-வணங்காமுடி

பேனர் ஊழல்: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்!

ஒருநாள் போதும்: பாஜகவை மிரட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *