தமிழகத்தில் அடித்து வெளுக்கப் போகும் கன மழை!

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி‌ நிலவுகிறது.

இதன்‌ காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில்‌ உருவாகி, நவம்பர் 9 மற்றும் 11 ஆகிய  தேதிகளில்‌ வடமேற்கு திசையில்‌ தமிழகம்‌ மற்றும்‌ புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்‌.

இதன்‌ காரணமாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.

next 5 days heavy rain alert

குறிப்பாக, நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 10-ஆம் தேதி, இராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, சென்னை,

காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, கள்ளக்குறிச்‌சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 11-ஆம் தேதி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, இராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில் கன முதல்‌ மிக கன மழை பெய்யும்.

புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, கிருஷ்ணரி, தர்மபுரி, இராமநாதபுரம்‌, கரூர்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி,

மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

10 சதவிகித இட ஒதுக்கீடு : முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் 17 ஆவது வனவிலங்கு சரணாலயம்: எங்கு அமைகிறது?

+1
2
+1
1
+1
2
+1
4
+1
2
+1
4
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *