அடுத்த மூன்று மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது.

இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்,

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

சிறப்பு முகாமில் 4 பேர் தங்குவதற்கு எதிர்ப்பு!

இனி என்ன சந்தோஷம் இருக்கப்போகிறது: நளினி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0