அடுத்த 3 மணி நேரம்: எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகம்

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை (டிசம்பர் 5) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடையக்கூடும்.

இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தநிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 26 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செல்வம்

டிஜிட்டல் திண்ணை: எம்.பி. தேர்தல் எப்படி இருக்கும்?  சீனியர்களை அதிர வைத்த திமுக நிர்வாகிகள்!

காயத்ரி ரகுராமுக்கு பதில் யார்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *