அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (டிசம்பர் 25) தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது.
இந்தநிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கோவை, நெல்லை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுகத்தில் 3-ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்வம்
“வாரிசு 2 எப்போது?” : தில்ராஜுவிடம் விஜய் கேட்டது ஏன்?
நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்! – பகுதி 4