வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
உக்ரைன் போர்: மேற்கத்திய நாடுகள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன – புதின்
கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்