தமிழகத்தில் இன்று (நவம்பர் 22) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி வட கிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்தநிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, தமிழகம்,
புதுவை கடற்கரையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
உலகக்கோப்பை: ஈரானை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!