அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
கடலூர் மற்றும் மத்திய உள் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம்,
உள்ளிட்ட 20மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி,
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 18மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதிகளில் சராசரியாக 21 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் பகுதியில் 3 செ.மீ மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 3செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
செல்வம்
‘சாமானியன்’: இணையும் ஹிட் கூட்டணி!
3 அல்ல, 300 சிலைகள் கூட வைப்போம்: ஸ்டாலின்