சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 31) பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாடவும், விபத்துகளை தவிர்க்கவும் சென்னை ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்தநிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,
. காமராஜர் சாலை மற்றும் எலியட் கடற்கரை பகுதிகள்
- கடற்கரை உட்புற சாலை 31.12.2024 அன்று இரவு 7.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இரவு 7.00 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
- காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2024 இரவு 8.00 மணி முதல் 01.01.2025 06.00 மணி வரை மூடப்படும்.
- அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
- பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது, சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்) பாரதி சாலை X விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை நடேசன் சாலை X டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பு வரை.
- தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
- கொடிமரச் சாலையில், இரவு 8.00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
- கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு (சாய்பாபா கோயில்), நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.
- அனைத்து மேம்பாலங்களும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும்.
எலியட் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்
31.12.2024 அன்று இரவு 08.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை 6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு. 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு. 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்
மூடப்படும் 23 மேம்பாலங்கள்
எழும்பூா் பாந்தியன் மேம்பாலம், மகாலிங்கபுரம் மேம்பாலம், இந்திரா நகா் ‘யூ’ திருப்பம், ஆழ்வாா்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலை மேம்பாலம், ராயப்பேட்டை ஜிஆா்எச் மேம்பாலம், ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமி மேம்பாலம், அண்ணா மேம்பாலம், ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம், வாணி மஹால் மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், வடபழனி மேம்பாலம், அடையாறு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம், சென்னை விமான நிலைய மேம்பாலம், நுங்கம்பாக்கம் முரசொலி மாறன் மேம்பாலம், திருமங்கலம் மேம்பாலம், 100 அடி சாலை மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம், புதிய வள்ளலாா் மேம்பாலம் உள்ளிட்ட 23 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…