வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கிவரும் இந்தியன் ரயில்வே, அனைத்து தரப்பினருக்குமான புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.
அண்மைக்காலமாக, வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் இந்திய ரயில்வே அதிக அக்கறை கொண்டதும், அந்த ரயில்கள் அனைத்தையுமே பிரதமர் மோடியே நேரடியாகச் சென்று கொடியசைத்துத் தொடங்கி வைத்ததும் பேசுபொருளாகியிருந்தது. அத்துடன் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, ஏசி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சாதாரண ரயில் பயணிகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு ரயில் பயணம் மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய ரயில்கள் கட்டமைக்கப்படவிருக்கின்றன. வந்தே பாரத் போன்று புதிய வசதிகளுடன் ஏசி வசதி இல்லாத, படுக்கை வசதிகளைக் கொண்ட சாதாரண விரைவு ரயில்களை உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
ஏசி வசதி இல்லாத சாதாரண ரயில்கள் அனைத்தும் இரண்டு லக்கேஜ், கார்டு மற்றும் எட்டு படுக்கை வசதிகொண்ட பெட்டிகளுடன், 12 இரண்டாம் வகுப்பு மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் உருவாக இருக்கிறது. வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் நாட்டின் ஒரே ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னையில் உள்ள ஐசிஎஃப்பில் இந்த புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படவிருக்கின்றன.
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!
கிச்சன் கீர்த்தனா: காரப்புட்டு