கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Published On:

| By christopher

கொடைக்கானலில் பாதுகாப்பு கருதி நீளமான, கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கொடைக்கானல் மலைப்பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு கட்டாயமாக இ-பாஸ் சோதனையை நடைமுறைப்படுத்த வேண்டும். இ–பாஸ் இல்லாமல் அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கொடைக்கானல் சென்ற வாகனங்கள் வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இ-பாஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

அதே இடத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொண்டு செல்கிறார்களா என சுகாதாரத்துறையினரும் சோதனை செய்தனர். 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில், குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பெருமாள்மலை முதல் டைகர் சோலை வரை அரை கி.மீ., துாரத்துக்கு ஒரு மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்த நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த புதிய நடைமுறை வருகிற நவம்பர் 18-ம் தேதி அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் முதல் பன்னீர் தம்பி வழக்கில் தீர்ப்பு வரை!

ஹெல்த் டிப்ஸ்: காலை உணவுக்கு ‘டீ’யும் ‘பன்’னும் போதுமா?

பியூட்டி டிப்ஸ்: ரோஜாப்பூக் கன்னங்களுக்கான ரோஸ் வாட்டர்… நீங்களே செய்யலாம்!

கிச்சன் கீர்த்தனா : ஆலூ போஹா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel