தெருவோர டீக்கடைகளில் சூடான வடைகளுக்கு இணையாக, இனிப்பான காஜாக்களும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை சாப்பிடலாமா, வேண்டாமா என்று நினைப்பவர்கள் பலருண்டு. அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே சுவையான காஜா செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
மைதா மாவு – ஒரு கப்
தயிர், சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – அரை கப்
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு பூரி மாவு போலப் பிசையவும். கடலை மாவையும் எண்ணெயையும் சேர்த்துக் குழைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, அரை கம்பிப் பாகு தயாரிக்கவும். இதுவே சிரப். மைதா மாவை ஐந்து உருண்டைகளாகப் பிரித்து சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேலும் கடலை மாவு கலவையைத் தடவவும். ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, பாய் போலச் சுருட்டவும். பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். வெட்டிய துண்டுகளை லேசாகத் தேய்க்கவும். எண்ணெயைக் காயவிட்டு தேய்த்தத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த காஜாவைச் சர்க்கரை சிரப்பில் போட்டுச் சிறிது நேரம் ஊறவிடவும். பிறகு எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.
குறிப்பு:
மீதி சிரப் இருந்தால் கடைசியாக காஜாக்கள் மேலே ஊற்றிவிடலாம்.
நேற்றைய ரெசிப்பி: லேயர் மட்ரி