நெசவாளர்களுக்கு புதிய மின் கட்டணம்!

தமிழகம்

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்,

மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தப் பிரச்சினையை முதல்வரிடம் கொண்டு சென்று தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலையில் உள்ள வணிகர் சங்க கட்டடத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் சார்பில் வேட்பாளர் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, பெரியகருப்பன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, த.மோ.அன்பரசன், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை ஏற்று மின்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 1000 யூனிட் ஆகவும், இதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த 200 யூனிட் மின்சாரத்தை 300 யூனிட் ஆக உயர்த்தப்படும்.

மேலும் விசைத்தறியாளர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.40 பைசா உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரூ.0.70 பைசாவாக குறைத்து அதற்கான ஆவணங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். தற்போது இடைத்தேர்தல் நடப்பதால், தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்படும்” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜ்

டிஜிட்டல் திண்ணை: பன்னீரை பஞ்சர் ஆக்கிய பாஜக- அடைக்கலம் தேடும் ஆதரவாளர்கள்

கிச்சன் கீர்த்தனா: எடை குறைப்பு முயற்சியில் தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *