அடுத்த ரவுண்டு : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தமிழகம்


வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகச் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இன்னும் அங்கு முழுமையாக மழை நீர் வடியாத சூழ்நிலையே உள்ளது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 18) வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று முதல் நவம்பர் 19ம் தேதி வரை தமிழகம் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
பிரியா

சர்ச்சையில் சிக்கிய பிரதீப்… துணிந்து வாய்ப்புக் கேட்ட பிரேம்ஜி

ரீஃபண்ட் தொகையை தர ஒப்புக்கொண்ட ஏர் இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.